ஈரோட்டில் கண்ணாடி விற்பனை நிறுவனத்தில் ரூ.2 கோடி கையாடல் செய்த ஊழியர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்

ஈரோட்டில் கண்ணாடி விற்பனை நிறுவனத்தில் ரூ.2 கோடி கையாடல் செய்த ஊழியர் மீது நிறுவன உரிமையாளர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.;

Update: 2025-02-12 14:15 GMT
கண்ணாடி நிறுவனத்தின் உரிமையாளர் முகிம்கான் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது எடுத்த படம்.

ஈரோட்டில் கண்ணாடி விற்பனை நிறுவனத்தில் ரூ.2 கோடி கையாடல் செய்த ஊழியர் மீது நிறுவன உரிமையாளர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ஈரோடு வஉசி பூங்கா சாலையை சேர்ந்தவர் முகிம்கான். இவரும், இவரது சகோதரரும் இணைந்து அதே பகுதியில் கண்ணாடி விற்பனை நிறுவனம் ஒன்றினை பல வருடங்களாக நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் ஜாபர் என்பவரும் பங்குதாரராக உள்ளார்.

இந்நிறுவனத்தில், உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஆதில்கான் என்பவர் 12 வருடங்களாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகள் மட்டும் அல்ல, வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை ஆகியவற்றையும் ஆதில்கான் பார்த்து வந்து உள்ளார்.

இதில், கடந்த சில மாதங்களாகவே கணக்கு வழக்குகளில் முறையாக இல்லாமல் இருந்தது. மேலும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகைகளிலும் மோசடி ஏற்பட்டு உள்ளது என்பதும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய சலான்கள் போலியாக தயாரித்து கொடுத்ததும், கண்ணாடி நிறுவனத்தின் உரிமையாளர்கள் முகிம்கான் மற்றும் அவரது சகோதரர்களுக்கு தெரியவந்தது.

மொத்தமாக ரூ.2 கோடி ரூபாய் வரை ஆதில்கான் மோசடி செய்து அதனை தனது வங்கி கணக்கிற்கும், உறவினர்கள் வங்கி கணக்கிற்கும் ஆதில்கான் அனுப்பி வைத்து உள்ளது தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்த முகீம்கான், இச்சம்பவம் குறித்து ஆதில்கானிடம் கேட்ட பொழுது முன்னுக்கு பின்னாக பதில் அளித்தது மட்டுமின்றி நிறுவனத்திற்கு வராமல் இருந்து உள்ளார். 

இதனால், பாதிக்கப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர்கள் முகிம்கான் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியரே ரூ.2 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News