சென்னிமலை அருகே மதுபோதையில் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை

சென்னிமலை அருகே மதுபோதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;

Update: 2025-02-12 09:15 GMT

ஈரோடு : சென்னிமலை அடுத்த மணிமலைகரடு பகுதியைச் சேர்ந்த சண்முகத்தின் மகன் மனோஜ்குமார் (24). நேற்று முன்தினம் மதியம் சண்முகம் வீட்டை பூட்டி விட்டு, தனது மனைவியுடன் துணி துவைப்பதற்காக, அப்பகுதியில உள்ள வாய்க்காலுக்கு சென்றுள்ளார்.

பின்னர் இரவில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த மனோஜ்குமார், ஏன் மதியம் வீட்டின் சாவி வைக்கவில்லை எனக் கூறி, சண்முகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், மணிமலைக்கரடியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்ற மனோஜ்குமார், அங்கு மரத்தில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மனோஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே மனோஜ் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது தொடர்பாக சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News