சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் திராட்சை பழங்களை ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;

Update: 2025-02-12 00:15 GMT

விபத்துக்குள்ளான சரக்கு வேனை படத்தில் காணலாம்.

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் திராட்சை பழங்களை ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அருகே உள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவு களை கொண்டதாகும். இந்த கொண்டை ஊசி வளைவுகள் குறுகளாக இருப்பதால் அவ்வப்போது வாகனங்கள் நிலை தடுமாறி சாய்ந்து விழுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு மராட்டியத்தில் இருந்து திராட்சை பழங்கள் ஏற்றிக்கொண்டு கோவை மார்க்கெட்டுக்கு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. சரக்கு வேனை கோவை மாவட்டம் குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த முகமது அன்சார் (வயது 29) என்பவர் ஓட்டினார். கிளீனர் சயின்ஷா (வயது 48) உடன் இருந்தார்.

சரக்கு வேன் திம்பம் மலைப்பாதையின் 3வது வளைவில் திரும்பிய போது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. 2 பேரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News