வரும் 13 முதல் 28ம் தேதி வரை பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம்கள்: ஈரோடு ஆட்சியர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டங்களின் கீழ் கடன் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.;
கடன் வழங்கும் முகாம்கள் (பைல் படம்).
ஈரோடு மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டங்களின் கீழ் கடன் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டேப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) ஆகியவை தனிநபர்கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டங்களை செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 13ம் தேதி (அதாவது நாளை மறுநாள்) முதல் 28ம் தேதி வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம், மத்திய கூட்டுறவு வங்கியின் அம்மாபேட்டை, அந்தியூர், அத்தாணி, பவானி, சென்னிமலை, சம்பத்நகர், கோபி, கவுந்தப்பாடி, கொடுமுடி, தாளவாடி, மொடக்குறிச்சி, நம்பியூர், புஞ்சைபுளியம்பட்டி, சத்திய மங்கலம், சிவகிரி, டி.என்.பாளையம், பெருந்துறை, அறச்சலூர், அவல்பூந்துறை, காஞ்சிக்கோவில், குருமந்தூர், ஈரோடு பஜார் கிளை, சோலார், சூரம்பட்டிவலசு, மாணிக்கம் பாளையம், டி.ஜி.புதூர், சித்தோடு, ஈரோடு கூட்டுறவு நகர வங்கி முனிசிபல் காலனி, சென்னிமலை கூட்டுறவு நகர வங்கி தலைமையகம், சத்தியமங்கலம் கூட்டுறவு நகர வங்கி தலைமையகத்தில் கடன் முகாம்கள் நடக்கின்றன. இதுகுறித்த மேலும் விவரங்களை 0424 2260155 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.