கோபிசெட்டிபாளையம் அருகே பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வினோபாநகர் நியாய விலைக் கடையில் பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட வினோபாநகர் நியாய கடையில், பொது வினியோக திட்டத்தில், குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
கோபி வருவாய் கோட்டாட்சியர் திவ்யபிரியதர்ஷினி தலைமை வகித்தார். புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் நீக்கம் என மொத்தம் 31 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது, துறை ரீதியாக தீர்வு காண அதிகாரிகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் திவ்யபிரியதர்ஷினி உத்தரவிட்டார்.