ஈரோடு மாவட்டத்தில், தபால் நிலையங்கள் மூலம் மகளிர் உரிமைத் தொகை பெற வாய்ப்பு

Erode news, Erode news today - மகளிர் உரிமைத் தொகை பெற வசதியாக அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மூலமாக ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு துவங்கலாம் என, ஈரோடு கோட்ட அஞ்சலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-06 03:20 GMT

Erode news, Erode news today- இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி (பைல் படம்).

Erode news, Erode news today- மகளிர் உரிமைத் தொகை பெற வசதியாக அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மூலமாக ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு துவங்கலாம் என, ஈரோடு கோட்ட அஞ்சலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு தபால் கோட்ட கண்காணிப்பாளர் ஜி.கருணாகர பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- 

தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெற தகுதி உள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியமாகும். எனவே தகுதியான விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியர்களை அணுகி இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி கணக்கு தொடங்கலாம்.

இதன்மூலம் வங்கி சேவையை உங்கள் வீட்டு வாசலிலேயே பெறலாம். மேலும் மகளிர் உரிமைத்தொகை பெறும் போது எளிதாக தபால்காரர் மூலம் பணத்தை எடுத்துக்கொள்ள லாம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மட்டுமின்றி 100 நாள் வேலை திட்டம், பிரதம மந்திரி வேளாண் திட்டம், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை உள்ளிட்ட அரசின் திட்டங்களின் கீழ் உத வித்தொகைகள் பெறும் அனைவரும் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி மூலம் பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News