ஈரோட்டில் நாளை (பிப்.12) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு

ஈரோட்டில் நாளை (பிப்.12) புதன்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-02-11 03:00 GMT

நாளை மின்தடை.

ஈரோட்டில் நாளை (பிப்.12) புதன்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் ஈரோடு வில்லரசம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பழையபாளையம் மின்பாதையில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் உயர்மின் அழுத்த நுகர்வோருக்கான மின் பாதையை மாற்றி அமைக்கும் பணி நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதனால் கீழ் கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோககம் இருக்காது என ஈரோடு மின்பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு வில்லரசம்பட்டி துணை மின் நிலைய பழையபாளையம் மின் பாதை:- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- ஈரோடு பழையபாளையம், கீதாநகர், செல்வம் நகர், குமலன்குட்டை மற்றும் பெருந்துறை ரோடு.

Tags:    

Similar News