ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரும் 19ம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்; அவ்வாறு அளிக்கப்படவில்லை என்றால், புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-11 03:30 GMT

தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை அறிவிப்பு.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரும் 19ம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்; அவ்வாறு அளிக்கப்படவில்லை என்றால், புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வினோத்குமார் தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ம் தேதி நடக்கிறது. தேர்தல் தினத்தன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களும் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒருநாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.

வெளிமாநில தொழிலாளர்களை பொறுத்தவரை சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் அன்று தேர்தலில் வாக்களிக்க அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல வேலையளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களை ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வினோத்குமாருக்கு 99943 80605 என்ற கைப்பேசி எண்ணிலும், 0424 2219521 என்ற தொலைபேசி எண்ணிலும், துணை இயக்குனர் கார்த்திகேயனுக்கு 98650 72749 என்ற கைப்பேசி எண்ணிலும், 0424 2211780 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News