ஈரோடு: சித்தோடு வாய்க்கால்மேடு பகுதியில் முழுநேர ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர்!
ஈரோடு மாவட்டம் சித்தோடு வாய்க்கால்மேடு பகுதியில் முழுநேர ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சு.முத்துசாமி இன்று (மே.14) திறந்து வைத்தார்.;
சித்தோடு வாய்க்கால்மேடு பகுதியில் முழுநேர ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சு.முத்துசாமி இன்று (மே.14) திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் முழுநேர ரேஷன் கடையான குமிளம்பரப்பு – 1 முழுநேர ரேஷன் கடையிலிருந்து 356 குடும்ப அட்டைகளையும், ராயபாளையம்புதூர் முழுநேர ரேஷன் கடையிலிருந்து 447 குடும்ப அட்டைகளையும் என மொத்தம் 803 குடும்ப அட்டைகளைப் பிரித்து சித்தோடு வாய்க்கால்மேடு, காந்திநகர் என்ற இடத்தில் பொது மக்களின் வசதிக்காக வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் செயல்படக்கூடிய புதிய முழுநேர ரேஷன் கடையை அமைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இந்த முழுநேர ரேஷன் கடையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று (மே.14) புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு முழுநேர ரேஷன் கடையை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம், துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் கள அலுவலர் (பொது விநியோகத் திட்டம்) கோவிந்தன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சார்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் பாலாஜி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.