ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று புதிய உச்சமாக 106.16 டிகிரி பாரன்ஹீட் பதிவு!
நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவாக ஈரோட்டில் புதன்கிழமை (மே.14) இன்று 106.16 டிகிரி வெயில் கொளுத்தியது.;
நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவாக ஈரோட்டில் புதன்கிழமை (மே.14) இன்று 106.16 டிகிரி வெயில் கொளுத்தியது.
ஈரோடு மாவட்டத்தில் அதிகரித்து வரும் வெயில் மற்றும் வெப்பம் பொதுமக்களின் இயல்பு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. காரணமாக வாழ்க்கை கடந்த 2 நாட்களாக 103 டிகிரி, 104 டிகிரி என வெயிலின் அளவு உயர்ந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் இன்று (மே.14) புதன்கிழமை இந்த ஆண்டின் உச்ச கட்டமாக 106.16 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
காலை 10 மணிக்கே உச்சி வெயில் போல் வாட்டி எடுத்தது. சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். அனல் காற்று வீசியதால் அவதியடைந்தனர். வாகனங்களில் சென்றவர்கள் அனல் காற்றை தாங்க முடியாமல் கடும் சிரமப்பட்டனர். மேலும், கடுமையான புழுக்கம் நிலவி வருவதால், பகல் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளில் இருக்க முடியாமலும், வெளியில் எங்கும் செல்ல முடியாமலும் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.