அந்தியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை காவல்துறையை கண்டித்து அந்தியூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-30 11:45 GMT

மயிலாடுதுறை காவல்துறையை கண்டித்து அந்தியூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, மயிலாடுதுறை மாவட்டம், பருத்திக்குடி கிராமத்தில், உள்ளூர் விவசாயத் தொழிலாளர்களை தவிர்த்து வெளியூர் ஆட்களை கொண்டு வந்து வேலை செய்தததை தட்டிக்கேட்ட, உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது, மயிலாடுதுறை காவல்துறை கொடூரமா தாக்குதல் நடத்தியது.

இதனை கண்டித்து விதொச, சிபிஎம் சார்பில், நேற்று மாலை அந்தியூர் ஆட்டோ ஸ்டெண்ட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு விதொச தாலுக்கா தலைவர் கே.குருசாமி தலைமை தாங்கினார்,

அகில இந்த விவசாய தொழிலாளர் சங்க தாலுக்கா செயலாளர் எஸ்.வி.மாரிமுத்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தாலுக்கா செயலாளர் ஏ.கே.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுக்கா செயலாளர் ஆர்.முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில், தாலுக்கா கமிட்டி உறுப்பினர் ஆர்.மாரியப்பன், ஒன்றிய கவுன்சிலர் ஜி.மயில்சாமி, அந்தியூர் பேரூராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் எஸ்.கீதாசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News