இடைத்தேர்தல் நடக்கும் ஈரோடு கிழக்கில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இறுதிகட்ட பிரசாரம் இன்று (பிப்.3) மாலையுடன் நிறைவடைந்தது.;

Update: 2025-02-03 12:15 GMT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.

 இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இறுதிகட்ட பிரசாரம் இன்று (பிப்.3) மாலையுடன் நிறைவடைந்தது.

ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் 14ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்ததால், நாளை மறுநாள் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தொகுதியில் 46 வேட்பாளர்கள் களத்தில் இருந்த போதிலும் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே இருமுனை போட்டி நிலவி வருகிறது. தொகுதியில் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்தி 546 வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக 237 ஓட்டுச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த  ஜனவரி மாதம் 20 தேதி துவங்கிய தேர்தல் பிரசாரம் இன்று (பிப்ரவரி 3) திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. அதனையொட்டி, தொகுதியில் கடந்த 14 நாட்களாக முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வந்த வெளி மாவட்ட அரசியல் கட்சியினர் இன்று மாலை 6 மணிக்கு பிறகு தொகுதியில் இருந்து வெளியேறினர்.

Tags:    

Similar News