ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளா்கள் 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளா்கள் 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.;
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளா்கள் 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லை எனில் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 12 வகை ஆதாரங்களில் ஏதாவது ஒரு ஆதாரத்தை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் ஙமாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
அவைகள் குறித்த விவரம் வருமாறு:-
1.ஆதார் அட்டை
2.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை
3. புகைப்படத்துடன் கூடிய வங்கி/ அஞ்சலக கணக்கு புத்தகங்கள்
4.தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை.
5.ஓட்டுநர் உரிமம்
6.நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD)
7.தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்தியப் தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை
8.இந்திய கடவுச்சீட்டு
9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
10.மத்திய மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களால்/வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்
11.பாராளுமன்ற / சட்டமன்ற /சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை
12.இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்படும் தனித்துவமான இயலாமைக்கான அடையாள அட்டை (UDID)