சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் சுட்டு கொல்லப்பட்ட இடத்தில் அரசு விழா

அறச்சலூரில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான், ஆங்கிலேயர்களால் சுட்டு கொல்லப்பட்ட இடத்தில் அரசு விழாவை நடத்த வேண்டும் என, 20 அமைப்புகளை உள்ளடக்கிய மாவீரன் பொல்லான் வரலாற்று மீட்புக்குழு வலியுறுத்தி உள்ளது.

Update: 2023-07-16 12:15 GMT

மாவீரன் பொல்லான் வரலாறு மீட்பு குழு ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம். 

சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னான் நினைவு தினம் நாளை திங்கட்கிழமை (17ம் தேதி) நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக மாவீரன் பொல்லான் வரலாறு மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் தலைவர் வடிவேல் ராமன் தலைமையில் சனிக்கிழமை (நேற்று) நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், "கி.பி., 1755 முதல் 1805 வரை கொங்கு மண்டலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து தீரன் சின்னமலையுடன் இணைந்து போரிட்டவர் பொல்லான். சுகந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவை போற்றும் வகையில் ஆடி மாதம் முதல் நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும், பொல்லான் மணி மண்டபம் அமைக்க, தமிழக அரசு 2 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள், தமிழ் புலிகள், தலித் விடுதலை கட்சி உள்ளிட்ட 20 அமைப்புகளை உள்ளடக்கிய மாவீரன் பொல்லான் வரலாற்று மீட்புக்குழுவினர், பொல்லான் நினைவு நாள் அரசு நிகழ்ச்சியை ஆங்கிலேயர்களால் பொல்லான் சுட்டுக்கொல்லப்பட்ட அறச்சலூர் நல்லமங்காபாளையத்தில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஆங்கிலேயர்களால் தலை கீழாக தொங்க விடப்பட்டு தோலை உரித்து சித்ரவதை செய்து சுட்டு கொல்லப்பட்ட இடத்தில் அரசு சார்பில் மரியாதை செய்வதே சரியானதாக இருக்கும்," என்றார்.

கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அம்பேத்கார், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன், தலித்து விடுதலைக்கட்சி இணைப்பு செயலாளர் தங்கராஜ், தலித்து விடுதலை இயக்கம் மாவட்ட தலைவர் தலித் பொன் சுந்தரம், கொங்கு விடுதலைப்புலிகள் கட்சி செயலாளர் விஸ்வநாதன்,இந்திய கன சங்கம் கட்சித் தலைவர் முத்துசாமி, அறம் மக்கள் கட்சி தலைவர் காமராஜ், திராவிட எழுச்சி பேரவைத் தலைவர் சக்திவேந்தன், திராவிட தமிழர் கட்சி செயலாளர் சிவக்குமார், ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், திராவிட சமத்துவ கட்சி அண்ணாதுரை, நீதி வெளிச்சம் கட்சி தலைவர் தளபதி குமார், தமிழ் சிறுத்தைகள் கட்சி தலைவர் அகத்தியன், தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல இயக்கம் தலைவர் அருணாச்சலம், திராவிடர் சிறுத்தைகள் கட்சி தலைவர் பருவாய் சாமிநாதன், தலித் விடுதலைக் கட்சி மாநில அமைப்பாளர் ஆறுமுகம், சமூக நீதி மக்கள் கட்சி ஆறுமுகம், திராவிட பேரவை தலைவர் மாசிலாமணி, மாவீரன் பொல்லான் பேரவை செயலாளர் சண்முகம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News