கோபி பேருந்து நிலையத்தில் கட்டுமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

கோபி பேருந்து நிலையத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தொழிலாளர்கள் கடையடைப்பு, வேலை நிறுத்த போராட்டம்.

Update: 2021-10-26 12:45 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டட்டுமான தொழிலாளர்கள்.

கோபியில் கட்டிட பொறியாளர்கள் சார்பில் கட்டிட பொருட்கள் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கோபி நகரில் உள்ள கட்டிட பொறியாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 98 கட்டிட பொறியாளர்கள் மற்றும் ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் புறக்கணிப்பு செய்தனர். கோபி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகிறது.வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக இன்று அந்த பகுதியில் உள்ள கடுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.மேலும் இதை கண்டித்து இன்று காலை கோபி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன.

Tags:    

Similar News