ஈரோட்டில் இன்று புதிய உச்சமாக 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு

ஈரோட்டில் இதுவரை இல்லாத அளவாக வியாழக்கிழமை (மே.2) இன்று 111.2 டிகிரி வெயில் கொளுத்தியது.

Update: 2024-05-02 07:29 GMT

கொளுத்தும் வெயில் (மாதிரிப் படம்).

ஈரோட்டில் இதுவரை இல்லாத அளவாக வியாழக்கிழமை (மே.2) இன்று 111.2 டிகிரி வெயில் கொளுத்தியது.

ஈரோடு மாவட்டத்தில் அதிகரித்து வரும் வெயில் மற்றும் வெப்பம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த 2 நாட்களாக 109‌ டிகிரி, 110 டிகிரி என வெயிலின் அளவு உயர்ந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் இன்று (மே.2) வியாழக்கிழமை இந்த ஆண்டின் உச்ச கட்டமாக 111.2 டிகிரி வெயில் கொளுத்தியது.

காலை 10 மணிக்கே உச்சி வெயில் போல் வாட்டி எடுத்தது. சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். அனல் காற்று வீசியதால் அவதியடைந்தனர். வாகனங்களில் சென்றவர்கள் அனல் காற்றை தாங்க முடியாமல் கடும் சிரமப்பட்டனர்.

மேலும், கடுமையான புழுக்கம்  நிலவி வருவதால், பகல் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளில் இருக்க முடியாமலும், வெளியில் செல்ல முடியாமலும் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இரவு நேரங்களில் மக்கள் வீட்டின் மொட்டை மாடிகளுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். அவர்கள் அங்கேயே குடும்பத்துடன் தூங்குகிறார்கள்.

இந்த நிலையில் நாளை மறுநாள் அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில், வெயிலின் தாக்கம் இன்னும் கடுமையாக இருக்கும் என தெரிகிறது. இதனால், ஈரோடு மாவட்ட மக்கள் இப்போதே பெரும் அச்சத்துக்குள்ளாகி உள்ளனா்.

Tags:    

Similar News