குருவரெட்டியூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு நாற்காலிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர்

பவானி சட்டமன்ற தொகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நாற்காலிகளை குருவரெட்டியூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வழங்கினார்.

Update: 2022-09-20 12:30 GMT

குருவரெட்டியூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு நாற்காலிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்.

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருவரட்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் அமருவதற்கு போதிய இருக்கை வசதி இல்லை என பள்ளி தலைமை ஆசிரியர் பவானி சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.சி. கருப்பண்ணனிடம் கோரிக்கை வைத்தார்.


இதனை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளி மாணவிகளுக்கு இருக்கையில் வழங்கி அவரது தேவைகளை உடனடியாக நிறைவேற்றிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருப்பண்ணன் அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் இப்பள்ளியில் பயிலும் 120 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளையும் வழங்கி மாணவர்களிடையே உரையாற்றினார்.

Tags:    

Similar News