முன்னாள் நிர்வாகிகள் குடும்பத்தினருக்கு பாராட்டு கேடயம் வழங்கி கவுரவிப்பு

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொன் விழாவில் தி முதலியார் கல்வி நிறுவன டிரஸ்டின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களை பாராட்டி கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

Update: 2023-04-13 04:30 GMT

டிரஸ்டின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பாராட்டி கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 50வது ஆண்டு பொன் விழா ஒரு வார நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், 3ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று கல்லூரி டிரஸ் டின் முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தி முதலியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜ மாணிக்கம் தலைமை வகித்து பேசினார். கல்வி நிறுவனத்தின் செயலாளரும், தாளாளருமான கே.கே.பாலு சாமி முன்னிலை வகித்து பேசினார்.

இதில், கல்லூரி டிரஸ்டின் முன்னாள் தலைவர்களான முத்துசாமி முதலியார், அருணாச்சலம், சுந்தரர், தண்டபாணி, முருகேசன், என்.முருகேசன், செயலாளர் மற்றும் தாளாளர்களான ராமசாமி, வெங்கடாச்சலம், ராமநாதன், சதாசிவம், ராணா லட்சுமணன், சண்முகம் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோருக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, பொருளாளர் விஜயகுமார், இணைச்செயலாளர் அருண் குமார் பாலுசாமி, துணைத்தலைவர்கள் மாணிக்கம், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

தொடர்ந்து, மதியம் இரண்டாம் நிகழ்வாக கல்லூரியில் அரசு உதவி பெரும் பிரிவின் பேராசிரியர்கள், சுய நிதிப் பிரிவின் பேராசிரியர் கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக தி முதலியார் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் முருகேசன் வரவேற்றார். கல்லூரி யின் இயக்குநர் வெங்கடாச்சலம் நன்றி கூறினார். இதையடுத்து இரவு சின்னத்திரை புகழ் அஷார், குரேஷி ஆகியோரின் தனித் திறமைகளுடன் கூடிய நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது

Tags:    

Similar News