ஈரோட்டில் ஓ.பி.எஸ். - அ.ம.மு.க. கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Erode news, Erode news today- கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை வழக்கு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோட்டில் அதிமுக ஓபிஎஸ் அணி - அமமுகவினர் செவ்வாய்க்கிழமை (நேற்று) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-02 04:15 GMT

Erode news, Erode news today- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக ஓபிஎஸ் அணி - அமமுக கூட்டணியினர்.

Erode news, Erode news today- கோடநாடு பங்களாவில் நடந்த கொலை வழக்கு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஈரோட்டில் அதிமுக ஓபிஎஸ் அணி - அமமுக கூட்டணியினர் செவ்வாய்க்கிழமை (நேற்று) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணியினர் ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் கோவிந்த் தலைமை தாங்கினார். அ.ம.மு.க. ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாந்த் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உள்ள மர்மங்களை கலைய உரிய விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ், செல்வம், சரவணகுமார், பகுதி செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News