ஈரோட்டில், மகளிர் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

Erode news, Erode news today- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், மகளிர் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா, ஈரோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

Update: 2023-03-20 03:15 GMT
Erode news, Erode news today- பரிசுகளை அந்தியூர் எம்எல்ஏ ஏ‌.ஜி.வெங்கடாசலம் மற்றும் ஈரோடு மேயர் நாகரத்தினம் ஆகியோர் வழங்கினர்.

Erode news, Erode news today- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக வட்டத்திற்கு இடையேயான 2022-2023 ஆண்டு மகளிர்க்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொள்ளும் விளையாட்டுப் போட்டிகள் அந்தந்த மண்டலங்களில் நடைபெற்று தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கேரம், சதுரங்கம், இறகுப்பந்து, மேஜைப்பந்து, வளைப்பந்து மற்றும் எறிபந்து ஆகிய விளையாட்டு போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீராங்கனைக்களுக்கான இறுதிப் போட்டிகள் ஈரோடு பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் கடந்த 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது. பின்னர், பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மஹாராஜா கலை அரங்கத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பகிர்மானம் ஈரோடு மண்டலம் - ஈரோடு பொறிஞர் இந்திராணி தலைமைப் பொறியாளர் வரவேற்புரையாற்றினார். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் மற்றும் ஈரோடு மாநகராட்சி மேயர் எஸ்.நாகரத்தினம் வாழ்த்துரை மற்றும் பரிசுகளை வழங்கினார்கள். மணிக்கண்ணன் செயலர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சென்னை மற்றும் ப.மணிமாறன். பொது செயலாளர் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வாழ்த்துரையாற்றினார்.

மேலும் மாநகராட்சி துணை மேயர் வி.செல்வராஜ் மற்றும் கொங்கு பொறியியல் கல்லூரி தாளாளர் எ.கே இளங்கோ மற்றும் கல்லூரி நிர்வாகிகள்; கலந்து கொண்டனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தலைமைப் பொறியாளர் கள் க ரூர் கோவை சீரியல் குந்தா மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

வெற்றி பெற்ற மண்டலங்களின் விபரம் பின்வருமாறு;

போட்டிகள் முதலிடம் கேரம் ஈரோடு, இரண்டாம் இடம் திருச்சி; வளைப்பந்து முதலிடம் கோவை, இரண்டாம் இடம் ஈரோடு; சதுரங்கம் முதலிடம் ஈரோடு, இரண்டாம் இடம் திருநெல்வேலி சென்னை; இறகுப்பந்து முதலிடம் சென்னை ,இரண்டாம் இடம் கோவை; ஏறிபந்து முதலிடம் கோவை, இரண்டாம் இடம் திருச்சி; மேஜைப்பந்து முதலிடம் விழுப்புரம், இண்டாம் இடம் கோவை ஈரோடு கோயமுத்தூர் ஈரோடு சென்னை கோயமுத்தூர் விழுப்புரம் இரண்டாமிடம் திருச்சி;  ஒட்டு மொத்த முதலிடம் பிடித்த மண்டலம் : கோயமுத்தூர். 

நான்கு நாட்கள் நடைபெற்ற போட்டிகள் மற்றும் விழாவினை ஈரோடு மண்டலம் விளையாட்டுக்குழு அனைத்து ஏற் பாடுகளையும் செய்திருந்தது விழாவின் முடிவில் இயக்குநர் பகிர்மானம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சென்னை பொறிஞர்.மா.சிவலிங்கராஜன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News