கார்பன் டை ஆக்சைடை பாறைகளாக மாற்றும் தொழில் நுட்பம் கண்டு பிடிப்பு

கார்பன் டை ஆக்சைடை பாறைகளாக மாற்றும் தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டு இதற்கான ஆலை ஐஸ்லாந்து நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-06 07:27 GMT

ஐஸ்லாந்து நாட்டில் கார்பன் டை ஆக்சைடை பாறைகளாக மாற்றும் தொழிற்சாலை.

ஐஸ்லாந்து நாட்டில் கரியமில வாயுவை உறிஞ்சி அதைப் பாறையாக மாற்றும் தொழிற்சாலை இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது. அது என்ன செய்கிறது.. ஏன் அது ரொம்ப முக்கியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

உலகில் இப்போது புவி வெப்ப மயமாதல் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடு புவி வெப்ப மயமாதலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காகவே ஐஸ்லாந்து நாட்டில் ஒரு ஆலை அமைந்துள்ளது. இந்த மிகப் பெரிய ஆலை காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை நேரடியாக உறிஞ்சி அதை நிலத்திற்கு அடியில் சேமித்து வைக்கிறது.  சுவிட்சர்லாந்து நாட்டின் ஸ்டார்ட்-அப் நிறுவனமான கிளைம்வொர்க்ஸ் மற்றும் ஐஸ்லாந்தின் கார்ப்ஃபிக்ஸ் ஆகியவை இணைந்து இந்த மாபெரும் ஓர்கா ஆலையை அமைத்துள்ளன. இந்த ஆலையில் மொத்தம் 4 யூனிட்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு யூனிட்களிலும் கப்பல்களில் இருக்கும் கண்டெய்னர்களை போன்ற இரண்டு உலோகப் பெட்டிகள் இருக்கும். அவை தான் காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை நேரடியாக உறிஞ்சி அதை நிலத்திற்கு அடியில் சேமித்து அதைப் பாறைகளைப் போல மாற்றுகிறது.

ஓர்கா என்றால் ஐஸ்லாந்தில் எனர்ஜி என்று பொருள். இதன் காரணமாகவே இந்த ஆலைக்கு ஓர்கா எனப் பெயர் வைத்துள்ளனர். ஓர்கா ஆலை ஒவ்வொரு ஆண்டும் 4,000 டன் கார்பன் டை ஆக்சைடை காற்றில் இருந்து தனியாக உறிஞ்சி எடுப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது சுமார் 870 கார்களில் இருந்து ஓராண்டிற்கு வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு போன்றது ஆகும்.

பல்வேறு காரணங்களால் உலகில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற தொழில்நுட்பங்கள் அத்தியாவசிய ஒன்றாக மாறி இருக்கிறது. புவி வெப்ப மயமாதலுக்கு கார்பன் டை ஆக்சைடை முக்கிய காரணமாக இருக்கும் நிலையில், வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை பிரித்தெடுக்கும் இந்த தொழில்நுட்பம் புவி வெப்ப மயமாதலையும் நிச்சயம் குறைக்கும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலகெங்கும் இதுபோல 15 ஆலைகள் நேரடியாக உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 9,000 டன்களுக்கும் அதிகமான கார்பன் டை ஆக்சைடை கைப்பற்றுகின்றன. இந்த ஆலை ராட்சத ஃபேன்களை பயன்படுத்தி கார்பன் டை ஆக்சைடை சேகரிக்கிறது. உள்ளே ஒரு ஃபில்டர் இருக்கும் நிலையில், அதைத் தாண்டி கார்பன் டை ஆக்சைடை செல்கிறது. இந்த ஃபில்டர் நிரம்பிய உடன், அது மூடப்படும். பிறகு அதன் வெப்பம் அதிகரிக்கப்பட்டும். இதன் மூலம் அதிக கான்சென்ட்ரேட் கார்பன் டை ஆக்சைடை உருவாகும். அது தண்ணீருடன் கலக்கப்பட்டு 1,000 மீட்டர் ஆழத்தில் அருகில் உள்ள பாசால்ட் பாறையில் செலுத்தப்படும்.. மற்ற ஆலைகள் கார்பன் டை ஆக்சைடை மறுசுழற்சி செய்யும் நிலையில், இந்த ஓர்கா ஆலை மட்டும் அதை மொத்தமாக அகற்றுகிறது.

அது சரி ஏன் இதற்கு ஐஸ்லாந்து தேர்வு செய்யப்பட்டது என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். ஐஸ்லாந்து தான் அமெரிக்க மற்றும் யூரேசிய கண்ட தட்டுகளின் விளிம்பு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு எரிமலை செயல்பாடுகள் அதிகம் இருக்கும் என்பதால் அங்குள்ள மண் பாசால்ட்கள், நுண்துளை எரிமலை பாறைகளால் ஆனது. இவை தான் கார்பன் டை ஆக்சைடை சேமித்து வைக்கச் சேமித்து வைக்கச் சரியாக இருக்கும் என்பதாலேயே முதலில் ஐஸ்லாந்தில் இந்த ஆலையை அமைத்துள்ளனர்.

இப்போது அமெரிக்காவிலும் இதேபோன்ற முயற்சியை எடுத்துள்ளனர். அமெரிக்க எண்ணெய் நிறுவனமான ஆக்சிடென்டல் இதைக் கையில் எடுத்துள்ளது. தற்போது அதன் டெக்சாஸ் எண்ணெய் வயல்களில் சிலவற்றின் அருகே ஆண்டுக்கு 1 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை இழுக்க, மிகப்பெரிய ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News