கோபி: கணக்கம்பாளையம் அருகே காட்டுப்பன்றி தாக்கி மூதாட்டி படுகாயம்

ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள கணக்கம்பாளையத்தில் இன்று அதிகாலை காட்டுப்பன்றி தாக்கியதில் மூதாட்டி படுகாயமடைந்தார்.

Update: 2024-05-06 10:45 GMT

காட்டுப்பன்றி தாக்கியதில் மூதாட்டி படுகாயம் (கோப்புப் படம்).

Erode News, Erode Today News, Erode Live News - கோபி அருகேயுள்ள கணக்கம்பாளையத்தில் இன்று அதிகாலை காட்டுப்பன்றி தாக்கியதில் மூதாட்டி படுகாயமடைந்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி சுண்டக்கரடு எஸ்டி காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி சடைச்சி (வயது 65). சுண்டக்கரடு பகுதி வனப்பகுதியொட்டிய மலை கிராமமாகும். இங்கு ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக காட்டுப்பன்றிகள் அதிகளவில் வசித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று அதிகாலை சடைச்சி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டுப்பன்றி ஒன்று திடீரென சடைச்சியை கடுமையாக தாக்கியது. இதில் கீழே விழுந்த அவருக்கு முகம் கை காலங்களில் காயம் ஏற்பட்டது. மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, காட்டுப்பன்றி மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடி சென்று விட்டது.

உடனே, காயம் அடைந்த மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News