ஈரோட்டில் தமிழ்நாடு கல்வி நிர்வாக துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

Erode news, Erode news today- தமிழ்நாடு கல்வி நிர்வாகத்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம், நேற்று (சனிக்கிழமை) ஈரோட்டில் நடைபெற்றது.

Update: 2023-05-21 03:30 GMT

Erode news, Erode news today- ஈரோட்டில் நடந்த தமிழ்நாடு கல்வி நிர்வாக துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.

Erode news, Erode news today- தமிழ்நாடு கல்வி நிர்வாகத்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) ஈரோட்டில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஆர்.சேகர் தலைமை தாங்கினார் மாநில துணைத்தலைவர்கள் செல்வகுமார், துரைப்பாண்டி, திருப்பதி, ராஜேஷ்குமார் மாநிலச் செயலாளர்கள் எழில், இளம்பருதி, பேச்சியம்மாள், டேவிட் கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் விஜய மனோகரன் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;

அரசுப் பள்ளி அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேர மாற்றத்தை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் அலுவலகப் பணியாளர்களின் வேலை நேரத்தை காலை 10 காலை மணி முதல் 5.45  என்றிருந்ததை காலை 9.00 மணி முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றம் செய்திருப்பதை அரசு கைவிடவேண்டும்.

ஏற்கனவே பள்ளிகளில் பணியாற்றும் அலுவலகப்பணியாளர்கள் உயர் அலுவலகங்களில் இருந்து வரும் அவசர மின்னஞ்சல் கேட்பு விவரங்கள், வரவு – செலவு தொகுப்பறிக்கைகள், ஊதிய பட்டியல்கள், இணையதள குளறுபடிகளால், காலநேரமில்லாமல் கடுமையான பணிச்சுமையுடன் பணியாற்றி வருகிறார்கள். . எனவே இந்த வேலை நேர மாற்றத்தை அரசு கைவிட வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறையில் கருணை அடிப்படை நியமனங்கள், பணிவரன்முறை, தகுதி காண் பருவம், முன்தேதியிட்ட பணிவரன்முறை, 55 வயது நிறைவுற்றோரின் பவானிசாகர் பயிற்சி வயது தளர்வாணை, உள்ளிட்ட ஆணைகள் வழங்குவதில் உள்ள காலதாமதத்தை தவிர்த்து உடனடியாக ஆணைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆய்வக உதவியாளர்களின் இளநிலை உதவியாளர் பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைந்து, ஏற்கனவே பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களை பணி இறக்கம் செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும்.

3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்தவர்களுக்கு பொது மாறுதல் கவுன்சிலிங் மூலம் மாறுதல் வழங்கப்பட்டு ஊழியர்கள் பணியாற்றி வரும்நிலையில், மனமொத்த மாறுதல் என்ற பெயரில் ஏற்கனவே பணியாற்றி, 3 ஆண்டு விதியால் பணிமாறுதல் பெற்றவர்கள் அதே அலுவலகத்திற்கு திரும்பவும் மாறுதல் ஆணை பெறுவது, அரசின் நோக்கங்களுக்கு எதிரானது. இது போன்ற மாறுதல்களை பள்ளிக்கல்வி துறை நிர்வாகம் அனுமதிக்கக்கூடாது.

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சுப்பணியாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும். ஆர் எம் எஸ் ஏ திட்டத்தின் மூலம் அரசு மாதிரிப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் அலுவலகப்பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் அமைச்சுப்பணியாளர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தின் முடிவில் ஈரோடு மாவட்ட செயலாளர் பழனிவேல் நன்றி கூறினார்.

Tags:    

Similar News