சத்தியமங்கலம் அருகே 100 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே 100 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-01 10:30 GMT

Erode news, Erode news today- ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வசந்தி. ( அடுத்த படம்) கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 100 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவும், அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கவும் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், ஈரோடு போலீஸ் சூப்பிரண்ட் சசிமோகன் மேற்பார்வையில், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் ஈரோடு மாவட்டம் முழுவதும், பல்வேறு இடங்களில் தீவிரமான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில், சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் பழைய தபால் ஆபிஸ் வீதியை சேர்ந்த வசந்தி (வயது 53) என்பதும், அவர் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி பேருந்தில் அனுப்புவதற்காக காத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News