ஈரோடு மாவட்டத்தில் 5-ம் தேதி 'டாஸ்மாக்' கடைக்கு விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில், நாளை மறுநாள் ‘டாஸ்மாக்’ மதுபானக் கடைக்களுக்கும், பார்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட கலெக்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Update: 2023-02-03 06:00 GMT

Erode news-(கோப்பு படம்)

Erode news, Erode news today - வடலூர் ராமலிங்க அடிகளாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 5-ம் தேதி, ஒரு நாள் மட்டும், டாஸ்மாக் கடைக்களுக்கும், பார்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனால், அன்றைய தினம் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்றுள்ள மது கூடங்கள், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் சில்லறை விற்பனை மதுக் கடைகள் அதனை சார்ந்த மதுக்கூடங்கள் மூடப்பட வேண்டும்.

இதனை மீறி மதுபானங்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் மதுபான பார்கள், ஓட்டல்களில் உள்ள பார்களில் மது விற்பனை செய்தால் மதுபான பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்கள் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மதுக்கூட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News