ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு வந்த ரயிலில் அனாதையாக கிடந்த 9.250 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-18 02:30 GMT

ரயில் கிடந்த கஞ்சா பறிமுதல் செய்த ஈரோடு இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார்.

ஈரோடு வந்த ரயிலில் அனாதையாக கிடந்த 9.250 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சேலம் ரயில் நிலையத்தில் இருந்து ஈரோடு ரயில் நிலையம் வந்து கொண்டிருந்தது.

அப்போது, ஈரோடு ரயில் நிலைய இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் பிரியா சாய் ஸ்ரீ தலைமையிலான போலீசார் ரயிலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ரயிலில் எஸ்-1 பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த ஒரு பையை கைப்பற்றி போலீசார் சோதனையிட்டனர்.

அந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ரயிலில் இருந்து 9.250 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும், கஞ்சாவை கடத்தி வந்தது யார்.? எங்கிருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டது.? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News