தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

Update: 2024-05-17 11:38 GMT

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 450 இன்ஜினியரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பிஇ, பிடெக் போன்ற இளநிலை படைப்புகளில் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் பொது கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு இன்ஜினியரிங் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான கவுன்சிலிங் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் வரும் ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆறாம் தேதி தொடங்கியது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 330 மாணவ மாணவிகள் பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு லட்சத்து 677 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும் 63 ஆயிரத்து 110 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். ஜூன் 6-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விருப்பமுள்ள மாணவர்கள் www.tneaonline.orgஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் கூடுதல் ஓரங்களுக்கு என்ற 018004250110    என்ற தொலைபேசி எண்ணிலும்தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News