ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம மக்கள்..!

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், மலைக்கிராம மக்கள் ஆபத்தை உணராமல் காட்டாற்றை கடந்து சென்றனர்.;

Update: 2024-05-17 12:00 GMT

ஆபத்தை உணராமல் காட்டாற்றை கடந்த மலைக்கிராம மக்கள் .

கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், மலைக்கிராம ஆபத்தை உணராமல் காட்டாற்றை கடந்து சென்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களுக்கு செல்ல குரும்பூர் பள்ளம் மற்றும் சர்க்கரைப் பள்ளம் என 2 காட்டாற்றுகளை கடந்து செல்ல வேண்டும். தற்போது , இந்த இரு காட்டாறுகளின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குரும்பூர் பள்ளம் மற்றும் சர்க்கரைப் பள்ளம் ஆகிய 2 காட்டாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குரும்பூர் பள்ளத்தில் பாலம் கட்டும் பணிகள் முடிவடைந்த நிலையில் சர்க்கரைப் பள்ளத்தில் பாலம் கட்டும் பணிகள் முடிவடையாததால் மாக்கம்பாளையம் செல்லும் பேருந்து செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.


மேலும், சத்தியமங்கலம்- மாக்கம்பாளையம் செல்லும் அரசு பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், மலைக்கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்காக அடர்ந்த வனப்பகுதியில் சர்க்கரைப்பள்ளத்தில் ஓடும் காட்டாற்று வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் அபாய முறையில் கடந்தும், இருசக்கர வாகனத்தை ஓட்டியும் சென்றனர்.

சர்க்கரைப் பள்ளத்தில் புதிதாக உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், பணிகளை முடிக்கும் வரை இந்த நிலை தான் நீடிக்கும் வேறு வழி இல்லை என்பது மலைக்கிராம மக்களின் குமுறலாக உள்ளது. 

Tags:    

Similar News