சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

Erode news- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-05-17 13:30 GMT

Erode news- கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பேசினார்.

Erode news, Erode news today- சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில், 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் மாணவ, மாணவியர்களுக்கான நான் முதல்வன் "கல்லூரிக் கனவு" வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பேசும்போது தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டம். கோபிசெட்டிபாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 11ம் தேதியன்று 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் மாணவ, மாணவியர்களுக்கான "கல்லூரிக் கனவு" எனும் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

அன்றைய தினம் பங்கேற்க இயலாத மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில், இன்று (17ம் தேதி) சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் மாணவ, மாணவியர்களுக்கான "கல்லூரிக் கனவு" எனும் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியானது, 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயில செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு பயனுள்ளதாகவும், மேலும், மாணவ, மாணவியர்கள் அடுத்தக்கட்டத்திற்கு செல்வதற்கான வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் யுபிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்ச்சியில், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி பெற கல்லூரி செல்ல உள்ள மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான பல்வேறு வாய்ப்புகள், விண்ணப்பிக்கும் மற்றும் தேர்வு செய்யும் முறைகள், கல்வி கடன் பெறுவதற்கான வழிமுறைகள். மாணவர்களுக்கான தனிநபர் கவுன்சிலிங் உள்ளிட்ட விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

12-ஆம் வகுப்பு முடித்த அனைவரும் உயர்கல்வி படித்து பட்டம் பெறுவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கிறது. தற்போது பல புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் பல்வேறு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உயர்கல்வி அல்லாமல் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலமாகவும் பயிற்சிகள் வழங்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே மாணவ, மாணவியர்கள் இதுபோன்ற வாய்ப்புகளை நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதன் மூலமும் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர்களுக்கு தாங்கள் இருக்கும் இடங்களிலேயே வாய்ப்புகள் அமைந்து விடாது. எனவே, மாணவ, மாணவியர்கள் தன்னம்பிக்கையுடன் எங்கு வாய்ப்புகள் கிடைக்கின்றதோ அங்கு சென்று அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மேலும், மாணவ, மாணவியர்கள் எங்கு வாய்ப்புகள் அமைகின்றதோ அங்கு செல்ல தயாராக இருக்க வேண்டும். மேலும், நேர்காணல் நிகழ்வு அல்லது உயர் அலுவலர்கள் போன்றவர்களிடம் எவ்வாறு பேச வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும், ஈரோடு மாவட்டமானது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 97.42 சதவீதம் பெற்று மாநில அளவில், 2-ஆம் இடத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வில் பெற்ற 7-வது இடத்திலிருந்து 2-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனவே மாணவ, மாணவியர்கள் அனைவரும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்றாற்போலும், தங்களுக்கு விருப்பமுள்ள பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெருவதோடு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென என வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், அருண் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் அருண்குமார், உயர்கல்வி வழிகாட்டி வல்லுநர் அஷ்வின், ஜோஹோ ஸ்கூல் நிறுவனர் (மக்கள் தொடர்பு) சுஜாதா உட்பட கல்வியாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News