ஈரோட்டில் தூய்மை பணியாளர்கள் 4-வது நாளாக போராட்டம்; சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம்

Erode news, Erode news today-ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி அமைச்சருக்கு மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2023-01-24 10:00 GMT

Erode news, Erode news today- ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்.

Erode news, Erode news today- ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள், பாதுகாவல் ஊழியர்கள் என 132 ஒப்பந்த பணியாளர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தனியார் ஒப்பந்த நிறுவனம் (குவாலிட்டி பிராப்பர்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்) மூலம் பணியில் அமர்த்தப்பட்டனர். அப்போது, அந்த நிறுவனம் ஒப்பந்தம் எடுக்கும் போது அரசுக்கு உறுதியளித்தபடியும், ஈரோடு மாவட்ட கலெக்டர் நிர்ணயித்து அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியமான நாளொன்றுக்கு ரூ.707 வீதம் ஊதியம் வழங்கப்பட வேண்டும். (கடந்த 2021- 22ம் ஆண்டு, நாளொன்றுக்கு ரூ.693 ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்).

மேற்கண்டவாறு மாவட்ட கலெக்டர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணித்து, மாதந்தோறும் அறிக்கை அனுப்ப வேண்டிய பொறுப்பும், ஊதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பும் முதன்மை வேலையளிப்பவர் என்ற முறையில் அரசு மருத்துவமனை இணை இயக்குநருக்கு, (நலப்பணிகள்) வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒப்பந்த நிறுவனமோ நாளொன்றுக்கு ரூ.310 வீதம் மட்டுமே தனியார் நிறுவனம் ஊதியம் வழங்கி வந்தது. இதனால், அதிருப்தியடைந்த ஒப்பந்த பணியாளர்கள் ரூ.707 ஊதியம் வழங்கவேண்டும் என போராடி வந்தனர்.

இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை விடக் குறைவான ஊதிய நிர்ணயம் செய்து, கடந்த 21-12- 2022 அன்று தொழிலாளர்களுக்கே தெரியாமல், அவர்களிடம் ஒப்புதல் பெறாமல் 18(1) ஒப்பந்தம் செய்துள்ளனர். 

தொழிலாளர் நலனுக்கு எதிரான, சட்ட விரோதமான மேற்கண்ட 18(1) ஒப்பந்தத்தை ஏற்க மறுத்ததற்காக சங்கத்தின் கிளைத் தலைவராக செயல்பட்டு வந்த கல்பனா என்ற தொழிலாளி சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சிவகாமி ஜெமிலா, ஜோதி, வளர்மதி, ராமசாமி ஆகிய 5 பணியாளர்களும் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, கல்பனா உள்ளிட்ட 6 தொழிலாளர்களுக்கும் சர்வீஸ் தொடர்ச்சியுடனும், முழு சம்பளத்துடன் உடனடியாக வேலை வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி அன்று போடப்பட்டுள்ள சட்ட விரோத 18(1) ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் நலச் சட்டப்படி பணியாளர்களுக்கு பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, தங்கள் பிரச்னைக்கு உடனடி யாக தீர்வு காண வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி., ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

Tags:    

Similar News