ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு

ஈரோட்டில் 5வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.;

Update: 2024-05-05 12:15 GMT

கொளுத்தும் வெயில்.

ஈரோட்டில் 5வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு வெப்பம் தகிக்கும் மாவட்டமாக ஈரோடு மாறியது. கடந்த 2 மாதங்களாகவே கோடை வெயில் வாட்டி எடுத்தது. வெயிலின் தாக்கம் தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 2ம் தேதி எந்த ஆண்டும் இல்லாத உச்ச அளவாக ஈரோடு மாவட்டத்தில் 111.2 டிகிரி பதிவாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில், மாவட்டத்தில் 5வது நாளான இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 110 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவானது. இதனால், ஈரோட்டில் வெளியே செல்ல முடியாத நிலையில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் என்ன செய்வது என தெரியாமல் மக்கள் புலம்பி வருகிறார்கள்.

இக்கடுமையான வெயிலால் வீடுகளில் புழுக்கம் நிலவி வருகிறது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் பொது மக்கள் வீடுகளில் இருக்க முடியாமலும், வெளியில் செல்ல முடியாமலும் சிரமப்படுகின்றனர். இந்த கடுமையான வெயில் என்பது ஈரோடு மாவட்டத்திற்கு புதிது என்பதால் இதனை சமாளிக்க முடியாமல் அனைவரும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News