பவானிசாகர் அணையிலிருந்து 6,000 கன அடி நீர் வெளியேற்றம்; வெள்ள அபாய எச்சரிக்கை

Erode news, Erode news today- பவானிசாகர் அணையிலிருந்து தற்போதைய நிலவரப்படி 6,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-15 02:45 GMT

Erode news, Erode news today- பவானிசாகர் அணை.

Erode news, Erode news today- இந்த ஆண்டில் 5-வது முறையாக, பவானி சாகர் அணை 104 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணை ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதாலும், கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. 104.50 அடிக்கு மேல் சென்றால் அணையில் இருந்து உபரி நீர், பவானி ஆற்றுக்கு அப்படியே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், பவானி கரையோர பகுதி மக்களுக்கு ஏற்கனவே வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில். பவானிசாகர் அணை நீர்மட்டம் 104.50 அடியை கடந்த நேற்று முன்தினம் இரவு கடந்தது. இதனால் பவானிசாகர் அணையிலிருந்து உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் பவானிசாகர் அணை வரலாற்றில் 28- வது முறையாக 104 அடியை எட்டி உள்ளது. இந்த ஆண்டில் 5-வது முறையாக பவானிசாகர் அணை 104 அடியை எட்டியுள்ளது.

இன்று (15.12.2022) காலை 8 மணி  நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.61 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,107 கன அடியாக நீர்வரத்து அதிக பவானி ஆற்றுக்கு உபரிநீராக 6,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனையடுத்து பவானி ஆற்றின் கரையோரம் உள்ள கொடிவேரி, மேவாணி, ராக்கியாபாளையம் அடசப்பாள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுப்பணித் துறை மற்றும் வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் பவானி ஆற்றின் கரையோரங்களில் வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும்,  கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் நேற்றைய நிலவரப்படி 1,033 கன அடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கொடிவேரி அணையில் குளிப்பதற்கு பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். இதை அறியாமல் சுற்றுலா பயணிகள் வெளி மாவட்டங்களில் இருந்து சிலர் அணைக்கு வந்தனர். அணையின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு இருந்ததால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News