ஈரோட்டில் பணிநேர அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

erode government hospital doctors are protesting-ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கான பணிநேரத்தை மாற்றி அமைத்ததை கண்டித்து கவன ஏற்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-09 06:17 GMT

erode government hospital doctors are protesting-ஈரோடு அரசு ஆஸ்பத்திரி.(கோப்பு படம்)

erode government hospital doctors are protesting-தமிழகத்தில் பல கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்  உள்ளன. அந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு மருத்துவர் பணியில் இருப்பார். அவருக்கான பணி நேரம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை ஆகும்.

இந்த பணிநேரத்தின் அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பணிசெய்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அரசு மருத்துவர்களின் பணிநேரத்தை மாற்றி காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை பணியில் இருக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசு பிறப்பித்துள்ள அரசாணையை திரும்பப்  பெற வலியுறுத்தி ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News