பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி: ஈரோடு மாவட்ட வேளாண்துறை தகவல்

ஆதார் மூலம் விவரங்களை புதுப்பித்து சரி செய்தால் மட்டுமே இத்திட்டத்தின் 14 வது தவணைத்தொகை பெற முடியும்

Update: 2023-06-06 17:15 GMT

பைல் படம்

பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு, 4 மாதத்துக்கு ஒரு முறை, 2,000 ரூபாய் என ஆண்டுக்கு, 6,000 ரூபாய் இடு பொருட்கள் வாங்க ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

ஆதார் மூலம் விவரங்களை புதுப்பித்த சரி செய்தால் மட்டுமே இத்திட்டத்தின், 14வது தவணைத்தொகை பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது, 10,300 விவசாயிகள், தங்கள் ஆதார் எண்ணை சரி பார்த்து உறுதி செய்யாமலும், 8,000 விவசாயிகள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமலும் உள்ளனர்.

இதுவரை பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் எண்ணை சரி பார்த்து உறுதிப்படுத்தாதவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். www.pmkisan.gov.in என்ற வலைதளத்தில் உள்ளீடு செய்தால், விவசாயி மொபைல் எண்ணுக்கு ஒரு ஓ.டி.பி., வரும். அந்த எண்ணை உள்ளீடு செய்து, ஆதார் எண்ணை சரி பார்க்கலாம். அத்துடன், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும்.

இதற்காக தங்கள் பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தபால் வங்கி கணக்கு எண்ணை துவங்கியும் திட்ட நிதி பெறலாம். என்று ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) வெங்கடேசன் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News