கோபி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் கோபி அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
சோமசுந்தரம்.
கோபி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள காசிபாளையம் குப்பணன் வீதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 31). இவர் காசிபாளையம் மின்சார வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று காசிபாளையம் தண்ணீர்தொட்டி திடல் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி அதன் பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சோமசுந்தரத்தை மின்சாரம் தாக்கியது.
இதில், அவர் டிரான்ஸ்பார்மரில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.