ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை விடுமுறை: மாவட்ட தேர்தல் அலுவலர்

ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட்ட பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.;

Update: 2025-02-04 10:00 GMT

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட்ட பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நாளை ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட்ட பகுதியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி தவிர்த்து சுற்று வட்டார பகுதியில் பணிபுரிந்து வரும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடு முறை அளிக்கப்பட்டுள்ளது.

இவற்றை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 20 ஜோனல் டீம் உள்ளது. இவர்கள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கூடுதலாக ஒரு பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.54 லட்சம் ரொக்கத்தில் சுமார் ரூ.41 லட்சம் ரொக்கம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் ரூ. 12 லட்சம் ரொக்கம் விசாரணையில் உள்ளது.

அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்று வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டு விடும். ஜனநாயக கடமையை நிறைவேற்ற பொதுமக்கள் தயவு செய்து வாக்களிக்க வேண்டும். மேலும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்.

மொத்த வாக்காளர்களில் 90 விழுக்காடு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. 237 வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சா வடிகள் 9 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

237 வெப் காஸ்டிங் மற்றும் மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1,500 காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 3 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 57 புகார் பெறப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணிக்குள் வருபவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் போது வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி பழுது ஏற்பட்டது போல் தற்போது நடக்காமல் இருக்க தேவை யான அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News