திம்பம் மலைப்பாதையில் 2 வாகனகள் மோதி விபத்து : இளைஞர் படுகாயம்

திம்பம் மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தின் மீது ஈச்சர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.;

Update: 2025-02-19 03:45 GMT

ஈரோடு : திம்பம் மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தின் மீது ஈச்சர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதை 23-வது கொண்டை ஊசி வளைவில் ஆசனூரிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் சாம் தினகரன் (29) மீது, உடுமலையிலிருந்து சாம்ராஜ்நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஈச்சர் வாகனம் மோதியது. இந்த விபத்தில் இளைஞர் சாம் தினகரன் 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டார்.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் கயிறு மூலம் மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இளைஞருக்கு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக கோவை KMCH மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.இவ்விபத்து குறித்து ஆசனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News