பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.2.16 கோடிக்கு பருத்தி ஏலம்

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.16 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

Update: 2023-07-29 06:27 GMT

ஏலத்திற்கு கொண்டு வரப்பட்ட பருத்தி மூட்டைகளை படத்தில் காணலாம்.

பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு விற்பனைக்கு வந்த 8,724 மூட்டைகள் பருத்தி, ரூ.2.16 கோடிக்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மாசிப்பட்டத்தில் சாகுபடி செய்திருந்த பருத்தி, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி முதல் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பருத்தி ஏலம் நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 8,724 மூட்டைகள் பருத்தியை 827 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். பருத்தி குவிண்டால் ரூ.6,989 முதல் ரூ.7,622 வரையில் ஏலம் போனது. மொத்தம் 3,041.95 குவிண்டால் எடையுள்ள பருத்தி ரூ.2 கோடியே 16 லட்சத்து 6 ஆயிரத்து 743க்கு விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

இதில், கோவை, அன்னூர், பெருந்துறை, அந்தியூர், சங்ககிரி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை ஏலத்தில் எடுத்தனர்.

Tags:    

Similar News