முதலமைச்சர் திறனாய்வு தேர்வு; ஈரோடு மாவட்டத்தில் 4,235 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

ஈரோடு மாவட்டத்தில் 15 மையங்களில் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு நடந்த முதலமைச்சரின் திறனாய்வு தேர்வினை 4.235 பேர் எழுதினர்.

Update: 2023-10-08 03:15 GMT

ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் திறனாய்வு தேர்வை எழுதிய மாணவிகள்.

ஈரோடு மாவட்டத்தில் 15 மையங்களில் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு நடந்த முதலமைச்சரின் திறனாய்வு தேர்வினை 4.235 பேர் எழுதினர்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ - மாணவிகளின் திறனை கண்டறியவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு (டிஎன்சிஎம்டிஎஸ்இ) சனிக்கிழமை (நேற்று) மாநிலம் முழுவதும் நடந்தது.

இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு ரயில்வே காலனி நகரவை மேல்நிலை பள்ளி, ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி, மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, கணபதி பாளையம் அரசு மேல்நிலை பள்ளி, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, கோபி நகரவை பெண்கள் மேல்நிலை பள்ளி, பங்களாப்புதூர் அரசு மேல்நிலை பள்ளி, நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, புளியம்பட்டி பெண்கள் மேல்நிலை பள்ளி, சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, தாளவாடி அரசு மேல்நிலை பள்ளி, பவானி அரசு மகளிர் மேல்நிலை பள்ளி, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலை பள்ளி, சிங்கம்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி என 15 மையங்களில் காலை, மதியம் என 2 தாள் தேர்வாக நடைபெற்றது.

காலை 10 மணி முதல் 12 மணி வரை முதல் தாள் தேர்வும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடந்தது. இந்த தேர்வினை எழுத 4,488 மாணவ - மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதில்,காலை நடந்த முதல் தாள் தேர்வில் 4,235 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 253 பேர் ஆப்சென்ட் ஆகினர். அதேபோல், மதியம் நடந்த 2ம் தாள் தேர்வினை 4,233 பேர் எழுதினர். 251 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வானது ஓ.எம்.ஆர் அடிப்படையில் நடந்தது. தேர்வு பணியில் 320 ஆசிரியை, ஆசிரியர்கள் ஈடுபட்டனர். முதலமைச்சரின் திறனாய்வு தேர்வில் வெற்றி பெறும் மாணவ -மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் இளநிலை பட்ட படிப்பு வரை உதவி தொகை அரசால் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News