பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா: பூச்சாட்டுதலுடன் நாளை தொடக்கம்

இந்த விழாவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்

Update: 2023-03-19 10:45 GMT

பண்ணாரிஅம்மன்(பைல் படம்)

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நாளை (திங்கள்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. ஈரோடு சத்தியமங்கலம் புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நாளை (திங்கட்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

பண்ணாரி மாரியம்மன் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

இந்த ஆண்டுக்கான குண்டம் விழா நாளை (தி்ங்கள்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கம்பம் சாட்டப்படுகிறது. அன்று முதல் பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் உற்சவ சிலைகள் ஊர்வலமாக சத்தியமங்கலத்தை சுற்றியுள்ள 100 கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படும்.. குண்டம் விழா அடுத்த மாதம் 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நடக்கிறது.

5-ந் தேதி கோவிலில் திருவிளக்கு பூஜையும், 6-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 7-ந் தேதி தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 10-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது. குண்டம் விழா அன்று கூடும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெயிலில் அவதிப்படாமல் இருக்க பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையில் வருவதற்காக இப்போதே தடுப்பு கட்டைகளை அமைக்கும் பணியும் நடைபெறுகிறது.


Tags:    

Similar News