ஹீமோகுளோபினோபதி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சிகிச்சை முறை: அமைச்சர் ஆய்வு
Hemoglobinopathy- ஹீமோகுளோபினோபதி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்
Hemoglobinopathy-ஈரோடு மாவட்டம், தாளவாடி மலை பகுதியில் உள்ள ஓசூர் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனூண்ணி தலைமையில் ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்க தொடக்க விழா, இருவார கால தீவிரமான வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் திட்டம் மற்றும் தொழுநோய் கண்டுபிடிப்பு நேரடி கள ஆய்வுப்பணி தொடக்க விழா நடைபெற்றது.
இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தார் முன்னதாக வயிற்றுப்போக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று ஹீமோகுளோபினோபதி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2