அந்தியூர் குருநாதசுவாமி கோயில் விழா; கால்நடை சந்தையில் சுங்கவரி ரத்து

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோயில் ஆடித் தேர்த்திருவிழாவில், கால்நடை சந்தையில் சுங்கவரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-08-02 03:45 GMT

Erode news, Erode news today- அந்தியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம். (கோப்பு படம்)

Erode news, Erode news today- அந்தியூர் குருநாதசுவாமி கோயில் திருவிழாவையொட்டி, நடத்தப்படும் கால்நடை சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் கால்நடைகளுக்கு வசூலிக்கப்படும் சுங்க வரி ரத்து செய்யப்பட்டுள்ளதாக சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவிலில் ஆடி பெருந்திருவிழா வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இங்குள்ள கால்நடை சந்தைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகளும், விற்பனையாளர்களும் மாடுகள், குதிரைகளை கொண்டு வருவார்கள். அவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும், சுங்கவரி தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கடந்த ஜூலை 14-ம் தேதி கால்நடைகளுக்கு சுங்கவரி வசூலிப்பது தொடர்பாக பொது ஏலம், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடத்தப்பட்டது. அப்போது, கால்நடைகளுக்கு சுங்கம் வசூலிப்பதில் விலக்கு அளித்திட விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கோரிக்கை மனு அளித்தனர். அதன்படி, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கொண்டு அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி இந்தாண்டு கால்நடைகள் மற்றும் வாகனங்களுக்கான சுங்கவரி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்தியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் செவ்வாய்க்கிழமை (நேற்று) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News