அறச்சலூரில் சமூகநீதி மக்கள் கட்சி சார்பில், விவசாய நிலம் மீட்பு பேரணி

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், அறச்சலூரில் சமூகநீதி மக்கள் கட்சி சார்பில், வரும் 20-ம் தேதி விவசாய நிலம் மீட்பு பேரணி நடக்கிறது.

Update: 2023-06-14 03:30 GMT
Erode news, Erode news today- அறச்சலூரில் விவசாய நிலம் மீட்பு பேரணி தொடர்பான அறிக்கை.

Erode news, Erode news today- இதுகுறித்து சமூகநீதி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் வடிவேல்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட அறச்சலூர் வடுகப்பட்டி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பூமிதான வாரியம் குடியேற்ற சங்கம் சார்பில், சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பட்டியல் இனமக்கள் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

நிலத்தை பெற்ற விவசாயிகள் அரசு நிபந்தனையை மீறி சட்ட விரோதமாக விற்பனை செய்தும், குத்தகைக்கு விட்டும் நிலங்களை பறிகொடுத்து உள்ளனர். சட்டப்படி இந்த நிலம் வாரிசுதாரர்களுக்கு மட்டுமே சேர வேண்டும். கடந்த ஆண்டு நில மீட்பு போராட்டம் நடத்தப்பட்ட பிறகு விவசாய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு, ஏழை மக்களுக்கு வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

எனவே, சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள 1,000 ஏக்கர் விவசாய நிலங்களை மீட்டு நிலம் இல்லாத பட்டியல் இன மக்களுக்கு தலா 2 ஏக்கர் வழங்க வேண்டும், இதற்காக தமிழக அரசு தாசில்தாரை நியமனம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய நில மீட்பு ஊர்வலம் நடக்கிறது. 

இந்த பேரணியானது, அறச்சலூர் அண்ணாநகரில் இருந்து வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வரை வருகிற 20-ம் தேதி நடக்கிறது. எனது தலைமையில் நடக்கும் இந்த ஊர்வலத்தை மூத்த வக்கீல் ப.பா.மோகன் தொடங்கி வைக்கிறார். இதில்நிலம் இல்லாத விவசாயிகள் பலர் கலந்துகொண்டு ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News