ஈரோட்டில் செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் விரக்தி: 8ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
ஈரோட்டில் செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் விரக்தியடைந்த 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.;
ஈரோட்டில் செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் விரக்தியடைந்த 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு கே.கே.நகர் ஷோபனா காட்டேஜை சேர்ந்தவர் யுவராஜா (வயது 43). இவருடைய மனைவி பிரிசில்லா. இவர்களது, 2வது மகன் ஜெபேஸ் (வயது 12). காசிபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு ஜேபேஸ் டிவி பார்த்துள்ளார். அதன் பின்னர், படிக்காமல் நீண்ட நேரம் செல்போன் பார்த்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை, அவரது தந்தை யுவராஜா படிக்காமல் இப்படி செல்போன் பார்க்கிறாயே என்று கண்டித்துள்ளார்.
இதனால், விரக்தியில், ஜெபேஸ் தன்னுடைய அறையின் விட்டத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.