ஈரோடு மாவட்டத்தில் 22 டாஸ்மாக் மதுக்கடைகள் மூட முடிவு

ஈரோடு மாவட்டத்தில், 22 டாஸ்மாக் கடைகளை மூட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-07 04:30 GMT

பைல் படம்.

தமிழகத்தில் 5,600 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. கடந்த சட்டசபை கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி 500 மதுக்கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

சமீபத்தில் நடந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள், டாஸ்மாக் மதுக்கடை பாரில் மது அருந்திய நபர்கள் உயிரிழந்தது போன்ற விவகாரங்கள், மதுக்கடை மூடப்படும் என்ற அரசின் அறிவிப்பை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக இருந்தது. மூடப்பட வேண்டிய மதுக்கடைகள் பட்டியலை, உரிய மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் தயாரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை குறைவான கடைகள், ஒரே பகுதியில் அமைந்துள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட கடைகள், கோவில், மருத்துவமனை போன்ற விதிகளுக்குப் புறம்பான இடங்களில் உள்ள கடைகள் என பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியது.

கோவை மண்டலத்தில் 88 கடைகளை மூட அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மாவட்டத்தில் 22 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 205 டாஸ்மாக் கடைகளில், 17 கடைகளில் குறைந்த மது விற்பனை உள்ளதாலும், 2 கடைகள் மற்ற கடைகளுக்கு மிக அருகாமையில் இருப்பதாலும், 2 கடைகள் பள்ளி அருகே உள்ளதாலும், ஒரு கடை பொதுமக்கள் எதிர்ப்பாலும் என 22 கடைகளை மூட அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டாஸ்மாக் கடை எண் 3816, 3709, 3960, 3546, 3912, 3472, 3464, 3861, 3916, 3666, 3670, 3707, 3697, 3544, 3963, 3847, 3850, 3677, 3902, 3656, 3536, 3507 ஆகிய கடைகளின் விவரம் அரசின் பட்டியலில் இணைந்துள்ளதால் இதற்கான முறையான அரசாணை வந்ததும் 22 கடைகளும் மூடப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News