தருமபுரி: இ பாஸ் இல்லாமல் திரிந்தவர்களின் டூவீலர்கள் பறிமுதல்

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா முழு ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 253 பேர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-04 05:48 GMT

தமிழகத்தில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்றினால் அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில், முழு ஊரடங்கு அமலில் இருந்தும்கூட, பலர் வெளியில் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். போலீசாரை ஏமாற்றிவிட்டு வாகனங்களை குறுக்கு வழிகளில் எடுத்து செல்கின்றனர். 

அதே நேரம், வாகனங்களில் காய்கறி, பழங்கள், மளிகைப்பொருட்கள் வீடு தேடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது போன்று விற்பனை செய்பவர்களுக்கு இ-பாஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,  முக்கியமான தேவைகளுக்கு செல்பவர்களுக்காக அரசு சார்பில் இ பாஸ் வழங்கப்பட்டுள்ளது. 

எனினும், தருமபுரியில், இ பாஸ் இல்லாமல் பலர் வாகனங்களில் சுற்றி திரிகின்றனர். அதேபோல், மாவட்டத்தில் உள்ள அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி உட்கோட்டங்களில் ஊரடங்கு விதிமுறைகளை மீது இ பதிவு இல்லாமல் வந்த 253 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

#தருமபுரி #கொரோன #லாக்டவுன் #ஊரடங்கு #விதிமீறல் #வாகனச்சோதனை #tamilnadu #lockdown #coronavirus #coronaspread #covid #police #rulebreakers #seized #epass 

Tags:    

Similar News