தர்மபுரியில் குறைந்து வரும் தக்காளி விலை

வரத்து அதிகரிப்பால் தக்காளி கிலோ ரூ 50க்கு விற்பனையாகிறது

Update: 2023-08-05 02:05 GMT

கோப்புப்படம் : தக்காளி சந்தை

தமிழ் நாட்டில் தக்காளி விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக தக்காளி விலை அதிகரித்தாலும் சில நாட்களில் குறைந்துவிடும். ஆனால் இம்முறை அதிகரித்த தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது.

நாடு முழுவதும் தொடர் மழை, நோய் தொற்று உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமை கடைகள், ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி சுமார் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை குறையவில்லை. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 160 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலை தொடர்ந்து 40-வது நாளாக உயர்ந்து வருவதால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வந்தனர்.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தர்மபுரியில் தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. உழவர் சந்தையில் 68 ரூபாய்க்கு விற்ற நிலையில் தக்காளி இன்று சற்று விலை குறைந்து ரூ. 40 முதல் 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் தக்காளி நிறுத்தப்ப ட்டுள்ளது. தக்காளி விலை குறைந்தாலும் வெளி மார்க்கெட்டில் விலையை குறைக்க வியாபாரிகளுக்கு மனம் இல்லாததால் கிலோ 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.

Tags:    

Similar News