வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு.

Update: 2022-02-08 06:30 GMT

ஆய்வில் ஈடுபட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி.

நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் - 2022 முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்பு வேலிகள் அமைத்தல், பாதுகாப்பு பணிகள், சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்துதல், வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வருகை தந்து அந்தந்த வாக்கு எண்ணும் இடங்களுக்கு செல்ல ஏதுவாக தனித்தனி பாதைகள் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, உத்தரவிட்டார்கள்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், தர்மபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குருராஜன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News