கோவையில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

கோவையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

Update: 2021-05-05 10:15 GMT

கோவை மாவட்டத்தில் 120 இடங்களில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி  கையிருப்பு குறைவாக இருப்பதால் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டன.

கோவை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அரசு கலை கல்லூரிக்கு மாற்றப்பட்டது. அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் கடந்த ஒருவாரமாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது. தடுப்பூசி போட வந்த 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்லூரி முன்பு தடுப்பூசி செலுத்துவதற்காக காத்திருந்த நிலையில், தடுப்பூசி முடிவடைந்தால் பொதுமக்களை போலீசார் கலைந்து செல்ல செய்தனர். இதனால் பல மணி நேரமாக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்நிலையில் இன்றும் கோவை அரசு கலைக் கல்லூரியில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கல்லூரி முன்பு கரும்பலகையில் 'இன்று தடுப்பூசி இல்லை' என எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது,"தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி மீண்டும் வந்தவுடன் பணிகள் துவக்கப்படும்" என்றனர்.

Tags:    

Similar News