அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் வெள்ளிச் சந்தை நிகழ்ச்சி
அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் வெள்ளிச் சந்தை நிகழ்ச்சி நடைபெற்றது.;
அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் வெள்ளிச் சந்தையில் மாணவர்களின் தயாரிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி மற்றும் பள்ளியின் செயலர் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது.
சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் வெள்ளிச்சந்தை எனும் நிகழ்ச்சி நடைபெற்றது மாணவர்களுக்கு மாணவர்களால் என்னும் நோக்கத்தில் அவர்களது பொருளாதாரத்தை வளர்க்கவும், பொருளுக்கு வழிகோலும் விதமாகவும் தங்களது திறமைகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.
இந்நிகழ்ச்சியை பெண் தொழில் முனைவோர் சங்கத்தின் நிறுவனர் கிருஷ்ணா ராதா கிருஷ்ணா மற்றும் சிறு குறு நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் இணை இயக்குனர் டாக்டர் இ பாஸ்கரன் துவக்கி வைத்தனர்
இந்நிகழ்ச்சியில் அன்னை வேளாங்கண்ணி நிர்வாக செயலர் கூறுகையில் மாணவர்கள் வேலை தேடுபவர் தேடுபவர்களாக இல்லாமல் பல பேருக்கு வேலை கொடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் நவம்பர் முதல் வரவிருக்கும் மாணவர்களை வரவேற்கக் காத்திருக்கிறோம் அரசு வழிகாட்டுதலின்படி வகுப்புக்கு 20 பேர் என வகுப்புகளை நடத்த உள்ளோம் என தெரிவித்தார்